அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது

அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே-26

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்களுக்கு தென்மேற்கு பருவமழை நீடிக்கும். இந்நிலையில் தெற்கு அந்தமான், நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை நேற்றுமுதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து, குமரி கடல் பகுதியில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் வரும் 30ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts