அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகே இன்று நில அதிர்வு

வங்கக்கடலில்  அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகே இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில்  அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகே இன்று அதிகாலை 1:51 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அந்தமான் தீவில் இருந்து 219 கிலோ மீட்டர் . தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 4புள்ளி5 ஆக பதிவானது. அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர்  ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும், அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பும் இந்த நிலநடுக்கத்தை உறுதி செய்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடலில் சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான அபாயமும் எழவில்லை. எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நேற்று சென்னைக்கு வடகிழக்கு திசையில் 550 கிலோ மீட்டர். தொலைவில் வங்ககடலில் நிலஅதிர்வு ஏற்பட்ட நிலையில் இன்று அந்தமானில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts