அந்தமான் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

அந்தமான் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

                இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதாகவும், இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவலுபெற கூடும் எனவும் தெரிவித்தார். இதன் காரணமாக தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் பலத்த காற்று வீச கூடும் எனவும், நாளை 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே மீனவர்கள் அந்தமான் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ஆந்திரா கடற்கரை பகுதி மத்திய மற்றும் வங்க கடல் பகுதிகளில், இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரித்தார். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை சில முறை மிதமான மழை பெய்யும் எனவும் அவர் கூறினார்.

                கடந்த 24 மணிநேரத்தில் பள்ளிப்பட்டு, காஞ்சிபுரம், தாமரைப்பாக்கம், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் 5 சென்டிமீட்டரும், ஸ்ரீபெரும்புதூர் செம்பரம்பாக்கம் பாண்டிச்சேரி விழுப்புரம் ஆகிய இடங்களில் நான்கு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்

Related Posts