அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வைகோ கைது..

நக்கீரன் கோபாலை விடுதலை செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தர்ணாவில் ஈடுபட்டார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை காவல் துறையினர் கைது செய்தனர்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில், திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் நக்கீரன் கோபாலை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அங்கு சென்றார். வழக்கறிஞர் என்ற முறையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி உள்ளே செல்ல முயன்றார் அனால் அவரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. எனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சட்ட விதிகளை சுட்டிக்காட்டி அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதிக்காததைக் கண்டித்து அங்கு சாலையில் அமர்ந்து தனி ஆளாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தர்ணா செய்தார். அவருடன் வந்திருந்த தொண்டர்கள், அரசையும் காவல் துறையையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தர்ணா நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அங்கு கண்டன கோஷம் எழுப்பினர்.

Related Posts