அனைத்து கட்டடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழை நீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு கெடு

அனைத்து கட்டடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழை நீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு கெடு விதித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து கட்டிடங்களிலும், மூன்று மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் மற்றும் மறுசுழற்சி வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அவ்வாறு செயல்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கழிவுநீர் மறுசுழற்சி வசதிகள் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரு வாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

சென்னையில் மாநகராட்சி அலுவலத்தில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் செய்முறை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Posts