அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் : தம்பிதுரை

பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்ததன் மூலம் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ஏழுமலையானை தரிசிக்கும் பொருட்டு மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இருவரும். இன்று காலை ஏழுமலையானை தரிசித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை இந்திய மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைகள் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.

.தமிழ் நாட்டின் நலன் கருதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார். அதிமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று தம்பிதுரை குறிப்பிட்டார்.

Related Posts