அனைத்து துறைகளிலும் ஊழல் செய்துவரும் அதிமுக ஆட்சி நீடித்தால் தமிழகத்தை விற்று விடுவார்கள்:  பாலகிருஷ்ணன்

ஓட்டப்பிடாரம் சட்டபேரவை தொகுதி இடைதேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக தாளமுத்துநகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அனைத்து துறைகளிம் ஊழல் செய்து வரும் அதிமுக ஆட்சி நீடிக்க்க் கூடாது என்று தெரிவித்தார்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அமமக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ., சுந்தர்ராஜ்க்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை பேச்சாளர் சி ஆர் சரஸ்வதி, புதியம்புத்தூர், கேடிசி நகர், தேவர் காலனி, பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியிடம் இரட்டை இலையையும் அதிமுகவையும் விற்று விட்டு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அடிமையாக இருக்கின்றனர் என்று கூறினார்.

Related Posts