அனைத்து மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் ஆதார் எண் மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆதார் எண் போன்றவற்றை சேகரித்து, கல்வித்தகவல் மேலாண்மை இணையதளமான EMIS-ல் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாத மாணவர்களை, வட்டார வள மையத்துக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கான புதிய ஆதார் எண்ணை பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கோ, ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கவோ கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5 வயது முடிவுற்ற மாணவர்களுக்கும், 15 வயது முடிவுற்ற மாணவர்களுக்கும், ஆதாரில் புகைப்படம், கைரேகை, கண் கருவிழி ஆகியவற்றை புதிதாக பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Related Posts