அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி: பிரியங்கா காந்தி

கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியை ஆதரித்து  பிரசாரம் செய்த அவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசு ஒரு பெரிய பெரும்பான்மையுடன்  அதிகாரத்திற்கு வந்தது எனவும்,  ஆனால் அந்த அரசு அதிகாரத்திற்கு வந்தது முதல்  நம்பிக்கை துரோகம் செய்ய ஆரம்பித்தாகவும் தெரிவித்தார்.  கலாச்சாரத்தில் மாறுபட்ட மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள் எனவும்,  பாஜக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் நாடு எந்த வளர்ச்சியைம் அடையவில்லை என்பதற்கு சாட்சிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பழங்குடி மக்களின் கலாச்சாரம், வயநாடு மக்களின் கலாச்சாரத்தை உணர்வதாகவும்,  தமிழகம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் தங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவதாகவும் பிரியங்கா காந்தி  கூறினார்.

 

 

Related Posts