அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை 

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதையடுத்து வரும் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலி காட்சி மூலம், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை தலைமை தேர்தல் ஆணையர் வழங்கினார். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பது குறித்து அவர் ஆலோசனைகளை தெரிவித்தார்.

Related Posts