அனைவருக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

பெரம்பலுாரில், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில், 2008 -2014ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில், 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித் தரப்பட்டதாக தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில், 1.30 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாகவும், மீண்டும், பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால்  2022ல், அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, குடிசையில்லாத இந்தியாவாக மாறும். என்று அவர் கூறினார்.

Related Posts