அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு சசிகலா இன்று ஆஜராகவில்லை

1996 – 97 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ஜெ.ஜெ. டிவிக்கு எலெக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் சசிகலா மீது 4வழக்குகள் பதிவு செய்தனர்.

கடந்த ஜனவரி மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது சசிகலா தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் குறுக்கு விசாரணை செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.

பின்னர் குறுக்கு விசாரணை குறித்து கேள்வி கேட்பதற்காக சசிகலாவை இன்று நேரில் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சசிகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம், சசிகலாவை வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்படி சசிகலா இன்று பெங்களூர் சிறையில் இருந்து, எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு வீடியோ கான்பரன்சில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

Related Posts