அன்னிய நிறுவனங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி  மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம்

அன்னிய நிறுவனங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி  மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக வணிகர் சங்க பேரவை தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும், என அவர் வலியுறுத்தினார். கோவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் உண்ணாவிரதப்பேராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts