அப்ரிதி கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பதிலடி

காஷ்மீரில் ராணுவ அத்துமீறலால் ரத்தம் சிந்தப்படுவதாகவும் இதனைத் தடுக்க ஐ.நா.சபை தலையிட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர் அப்ரிதி கூறியதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பை : ஏப்ரல்-05

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர், தங்கள் நாட்டை எப்படி நடத்திச் செல்ல வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் வெளியிலிருந்து யாருடைய புத்திமதியும் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆக்ரமிப்பு காஷ்மீரைப் பற்றியும் அங்கு பாகிஸ்தான் ராணுவத்தினரால் அப்பாவிகள் கொல்லப்படுவதைக் குறித்து, அஃப்ரிடி ஏன் பேச மறுக்கிறார் என்றும் சச்சின் கேள்வி எழுப்பினார்.

Related Posts