அமரவாதி வாக்குச்சாவடியில் சந்திரபாபு நாயுடு, தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார்

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிவிறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6மணிக்கு முடிகிறது. அரக்கு நாடாளுமன்ற தொகுதி, மற்றும் அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் வாக்குப் பதிவு நடக்கிறது.  ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.

ஆந்திராவில் வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அமரவாதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆந்திர முதல் அமைச்சர்சந்திரபாபு நாயுடு. தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வாக்களித்தார்.  ஆந்திராவில் ஆளும்  தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

Related Posts