அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் போராட்டம் நடைபெறும்

அமராவதி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கவில்லை என்றால் தி.மு.க சார்பில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய செந்தில் பாலாஜி, ஓவ்வொரு முறையும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மட்டும் பயனடைகின்றனர் என்றார். இதனால் அமராவதி ஆற்றின் கடை மடை பகுதியான கரூர் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்க படுவதாகவும், தற்போது அணையில் போதிய நீர் இருப்பதால் 2 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதேபோல் கரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் உயர்த்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கரூர் மக்களவை தொகுதி எம்.பிய ஜோதி மணி கூறியுள்ளார்.

Related Posts