அமெரிக்காவின் விசா சட்டத்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

அமெரிக்காவின் விசா சட்டத்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருவதால் காலாவதியான விசாக்களுடன் உள்ள இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் விசா காலம் முடிந்தபின் அதனை நீட்டிக்காமல் அவர்களை வெளியேற்றக்கூடிய புதிய விதிமுறை ஒன்றை டொனால்ட் ட்ரம்ப் அரசு இன்று முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. அதன்படி அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களின் விசா நீட்டிப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, விசா காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக உள்ளவர்களின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. இதன் மூலம் விசா மறுக்கப்பட்டவர்கள் மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் எச்1பி விசா வைத்திருப்போருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளிநாட்டவருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ள தொழில் நிறுவனங்களின் நலன்கள் பாதிக்கப்பட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இப்போதைக்கு நடவடிக்கை எதுவும் பாயாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Related Posts