அமெரிக்காவில் எச்-4 விசாவில் வேலை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது

Want create site? Find Free WordPress Themes and plugins.

அமெரிக்காவில் எச்-4 விசாவில் வேலை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது  என அந்நாட்டின் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

            அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்த போது ‘எச்-1’ பி விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கும்,  அவர்களின் 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும் ‘எச்-4’ விசா அளித்து,வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினர். இந்த திட்டத்தால், ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிற ஆண்களின் துணைவியர்களுக்கும் பெண்களின் கணவர்களுக்கும் அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிற தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு நல் வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு தற்போதைய குடியரசுத் தலைவர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதை கடந்த வாரம் அங்குள்ள நீதிமன்றத்தில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அப்போது கூறப்பட்டது. இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்காவில் செல்வாக்குமிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களான கமலா ஹாரிஸ், கிர்ஸ்டன்ஸீ கில்லிபிராண்ட் ஆகியோர் உள்நாட்டு பாதுகாப்புத்துறை இயக்குனர் கிறிஸ்டியன் நீல்சனுக்கும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள்துறையைச் சேர்ந்த பிரான்சிஸ் சிஸ்னாவுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில், ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி வேலை பார்க்க அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது எனவும், அப்படிச் செய்தால் அது பெண்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts