அமெரிக்காவில் நடைபெற்ற உலகின் அசிங்கமான நாய்களுக்கான போட்டி

அமெரிக்காவில் நடைபெற்ற உலகின் அசிங்கமான நாய்களுக்கான போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அமெரிக்கா : ஜூன்-25

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த போட்டியில், ஏராளமான நாய்கள் கலந்து கொண்டன. இதில், கலிபோர்னியாவைச் சேர்ந்த மேகன் பிரய்னார்ட் என்பவர் வளர்க்கும், ஸா ஸா என்று பெயரிடப்பட்ட புல்டாக் ரகத்தைச் சேர்ந்த நாய் அசிங்கமான நாய் என்ற பட்டத்தைப் பெற்றது. உள்ளிழுக்க முடியாத நீளமான நாக்குகள், வழக்கத்தை விட நீளமான கீழ்த்தாடை, உப்பிப் போன உடம்பு போன்ற காரணங்களால் இந்த நாய் பட்டம் வென்றது. நாய்க்கும், அதன் உரிமையாளருக்கும் ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டது.

Related Posts