அமெரிக்காவில் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

அமெரிக்காவில் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா : ஜூன்-29

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், அன்னபோலிஸ் நகரத்தில் செயல்பட்டு வரும் கேபிட்டல் கெசட் என்ற நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த ஒருவன், அங்கிருந்த ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.  இதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவனைப் பிடித்து விசாரித்து வருவதாகவும், இந்த வெறிச்செயலில் அவன் ஈடுபட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Posts