அமெரிக்காவில் ராணுவ விமான விபத்தில் 9 பேர் பலி

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில், 9 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்கா : மே-03

அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் ராணுவ வீரர்கள் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாவன்னா விமான நிலையம் அருகே அந்த விமானம், எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 9 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சமீப காலமாக அமெரிக்காவில் ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட ராணுவ விமான விபத்துகளில் சிக்கி ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts