அமெரிக்காவுக்கு எதிராக ஈரானில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரானில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

ஈரான் : மே-12

ஈரான் தலைநகர் டெஹரானில் ஊர்வலமாகக் சென்ற அவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான பதாகைளை ஏந்தியவாறு சென்றனர். அப்போது, ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அமெரிக்காவின் தேசியக் கொடியை எரித்தும் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.

Related Posts