அமெரிக்கா – தென்கொரியா போர் ஒத்திகைகளை நிறுத்த முடிவு

தென்கொரியாவுடன் கூட்டாக இணைந்து 2 போர் ஒத்திகைகளை நடத்தத் திட்டமிருந்த அமெரிக்கா, அவற்றைக் காலவரையின்றித் தள்ளி வைத்துள்ளது.

தென்கொரியா : ஜூன்-24

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தென்கொரியாவுடன் அமெரிக்கப் படையினர் மேற்கொள்ள இருந்த போர்ப்பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தப் பயிற்சி ஆகஸ்டு மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்கொரியாவுடன் இணைந்து அடுத்த 3 மாதங்களுக்குள் நடத்தத் திட்டமிட்டிருந்த 2 போர்ப் பயிற்சிகளைக் காலவரையின்றித் தள்ளிவைத்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Related Posts