அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொள்ளப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வருவம்  தலிபான் தீவிரவாதிகளை அழிக்க அந்நாட்டு அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் பயணம் செய்த பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் சில பாதுகாப்பது காரணங்களுக்காக கடந்த 2 நாட்களாக இந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி மாகாணத்தின் உள்ள காராபாக் மாவட்டத்தில் சையது வாலி மற்றும் மர்வார்டா ஆகிய பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா ராணுவ அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

Related Posts