அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவழி கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த முதல் பெண் செனட் சபை உறுப்பினர்  கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு இருப்பதாகதகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே வேளையில் ஜனநாயக கட்சி சார்பில் செனட் சபை உறுப்பினராக இருக்கும் முதல் இந்து பெண்  துளசி கப்பார்ட் போட்டியிடக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவழியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை உறுப்பினர் என்ற பெயரைப்பெற்றுள்ள கமலா ஹாரீசு, கலிபோர்னியா மாகாணம் ஓக்லாந்தில் பிறந்தாலும் கூட அவரது பூர்வீகம், சென்னை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இப்போது அதிபர் தேர்தல் நடந்து அதில் போட்டியிட்டால், டிரம்பை கமலா ஹாரீஸ் 10 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பார் என ஆக்ஸியாஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது

Related Posts