அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றினார் ரஃபேல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கடுமையாகப் போராடி, ரஃபேல் நடால் பட்டம் வென்றார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வந்த கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் தொடர் நிறைவு பெற்றுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

ஏறக்குறைய 5 மணி நேரம் நடந்த இப்போட்டியில், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் கைப்பற்றியிருக்கிறார். அமெரிக்க ஓபனில் 4-வது முறையாக அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தற்போது 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் பெடரர் முதலிடத்தில் உள்ளார். 19 பட்டங்களுடன் நடால் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

Related Posts