அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் : ரோஜர் பெடரர் தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் தோல்வி அடைந்தார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவும் பலப்பரீட்சை நடத்தினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-3,4-6,6-3,4-6,2-6 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். தோல்வி அடைந்த ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Posts