அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பியன்கா சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடா வீராங்கனை பியன்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி  உள்ளார்.

மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸும், பியன்காவும் மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19 வயது இளம் வீராங்கனை பியங்காவை சமாளிக்க முடியாமல் செரினா வில்லியம்ஸ் பலமுறை தடுமாறினார்.

இறுதியில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பியன்கா வெற்றிபெற்றார். 37 வயதான செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை படைக்க இருந்த நிலையில், இளம் வீராங்கனையிடம் செரினா தோல்வியடைத்துள்ளார்.

Related Posts