அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : ஜப்பான் வீரர் நிஷிகோரி வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி வெற்றி பெற்றார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி, 205-ம் நிலை அர்ஜென்டினா வீரர் மார்கோவை  சந்தித்தார். இதில் நிஷிகோரி 6-1, 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக மார்கோ போட்டியில் இருந்து விலகினார். இதனால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிஷிகோரி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் லாத்வியா வீராங்கனை செவஸ்தோவா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் கனடாவின் பவுச்சர்ட்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Related Posts