அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.77 ஆக சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று வர்த்த நேர முடிவின் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73 புள்ளி 34 ஆக வரலாறு காணாத சரிவை சந்தித்திருந்தது. இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரூபாய் மதிப்பு  மேலும் 44 காசுகள் சரிந்து 73 புள்ளி 77 ஆக சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளதால் இந்திய பங்குச் சந்தைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன.

Related Posts