அமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்

17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2  தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில்,வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில்,அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, மைத்துனர் ராபர்ட் வதேரா ஆகியோர் முன்னிலையில் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகன்ஜ் வரை 3 கிலோ மீட்டருக்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்தார். ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி மக்களவைத் தொகுதிஉறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேதியில் 6-ஆவது கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது

Related Posts