அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்த முயன்ற பெண் கைது

கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை : ஜூன்-29

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்ததாக கூறப்படும் பட்டினம்பாக்கம் மக்களை கண்டுகொள்ளாத மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வீட்டில் நண்டு விட்டு போராட்டம் நடத்த போவதாக மீனவ அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதனால் அவரது வீடு இருக்கும் பட்டினப்பாக்கம் சவுத்கேஸ்டில் தெருவின் இருமுனைகளிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென்று ஜெயகுமார் வீடு அருகே வந்த பெண் ஒருவர் தான் வைத்திருந்த பையில் இருந்த நண்டுகளை எடுத்து ஜெயகுமார் இல்லத்தில் விடமுயற்சித்தார். அங்கு பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினர் அந்த பெண்ணை உடனடியாக தடுத்து நிறுத்தினர். விசாரணையில் அவர் மீனவ பெண்மணி நர்மதா என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் பட்டினப்பாக்கம் காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

Related Posts