அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பா.ம.க. வேட்பாளருக்கு மாம்பழச் சின்னத்துக்குப் பதில் ஆப்பிள் சின்னத்துக்கு மீண்டும் வாக்குச் சேகரித்தார்

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் அனுமந்த நகரில் வாக்குச் சேகரித்த அவர், மாம்பழச் சின்னம் என்பதற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே கன்னிவாடி என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போதும் அவர் ஆப்பிள் சின்னம் என்று கூறி வாக்குச் சேகரித்த நிலையில் மீண்டும் அதையே கூறி வாக்குச் சேகரித்து வருகிறார்.

மேலும் கருணாநிதி மகன் ஸ்டாலின் என்பதற்கு பதில் ஸ்டாலின் மகன் கருணாநிதி என்று கூறினார்.

Related Posts