அமைதியான முறையில் இடைத் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது:  அசுதோஷ் சுக்லா 

கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் சூலூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா,டிஐஜி கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரன்,கோவை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சுஜித்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைக் சந்தித்த தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ்சுக்லா,

35 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகின்றது எனவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார். சூலூரில் 66 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

மேலும் பணம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளைக் முழுமையாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,பணம் கொடுப்பதை தடுக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 

சூலூர் தேர்தல் பணிக்காக 4123 போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும் மொத்தம் 35 சோதனை சாவடிகள் அமைக்கபப்ட்டு முழு அளவில் வாகன தனிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Related Posts