அம்பானியின் மகள் திருமண விழாவில் அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தொழிலதிபர் அம்பானியின் மகள் திருமண விழாவில் அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானி – அனந்த் பிரமால் திருமணம் மும்பையில் உள்ள அம்பானியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதேபோல், திரைப்பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா பச்சன், ஷாருக்கான், அமீர்கான், கரண் ஜோகர், அண்மையில் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவர் நிக் ஜோன், நடிகை தீபீகா படுகேனே-ரன்வீர் சிங் தம்பதி உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர்.

இதேபோல், கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சேவாக், ஹர்பஜன்சிங் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Posts