அம்பேத்கர் காட்டிய வழியில் பாஜக அரசு செயல்படுகிறது: பிரதமர் மோடி

 

 

மத்திய பாஜக அரசு, அம்பேத்கர் காட்டிய பாதையில் பயணிப்பதாக, பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

டெல்லி, ஏப்ரல்-04 

டெல்லியில் நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான புதிய குடியிருப்பு பகுதி விரிவாக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய மோடி, அம்பேத்கரின் பெயரை அனைவருமே அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். அம்பேத்கருக்கு தாங்கள் வழங்கிய கவுரவத்தைப்போல் வேறு எந்த அரசும் அளித்தது கிடையாது என பிரதமர் தெரிவித்தார். அம்பேத்கர் காட்டிய வழியில் மக்கள் நலனுக்காகவே பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

Related Posts