அம்மா மருந்தகத்தில் 200 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது

அம்மா மருந்தகத்தில் 200 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

சென்னை : மே-14

சென்னை-அண்ணாநகர் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில்அமைச்சர் செல்லூர் ராஜூஇன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடையில் விற்கப்படும் காய்கறிகளின் தரம்விலை மற்றும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ,மற்ற மாநிலங்களில் விலைவாசி உயர்ந்தாலும் தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகள் குறைந்த விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

Related Posts