அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

அயர்லாந்து : ஜூன்-30

அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிது. முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றநிலையில், இரண்டாவது போட்டி, டம்ப்ளின் நகரில் நடைபெற்றது. டாஸ்வென்ற அயர்லாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. 

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால், 12 புள்ளி 3 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாஹல், குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியது.

Related Posts