அயோத்தியில் 144 தடையுத்தரவு..!  2 லட்சம் பேர் நாளை அயோத்தியை நோக்கி பேரணி.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் நாளை அயோத்தியை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்ததும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான எந்த முயற்சியையும் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. மேற்கொள்ளவில்லை. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து இந்து அமைப்புகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி,ஹெச்.பி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்நிலையில், மீண்டும் அசாதாரணமான சூழல் ஏற்படும் என்று எச்சரித்து ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்துத்துவா தொண்டர்கள் அயோத்தியை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருப்பதாகவும்,. சுமார் இரண்டு லட்சம் பேர் நாளை அயோத்தியை அடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதையடுத்து அயோத்தியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் ராமர்கோவில் கட்டுவது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  மாநிலங்களவையில் மசோதா நிறைவேறுவதில் தடை ஏற்பட்டால், அவசர சட்டம் பிறப்பிக்கவும் மத்திய அரசு வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts