அயோத்தி வழக்கின் விசாரணை இன்று முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

இதுகுறித்து நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணையை மேற்கொள்ளுமென கூறப்பட்டுள்ளது.

இந்த அமர்வில் நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நாசர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம், இந்த வழக்கை சுமூகமாக தீர்க்க முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு அடங்கிய குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு 8 வாரங்களில் வழக்கில் தொடர்புடையவர்களுடன் கலந்து பேசி தீர்வுகாணவும் உத்தரவிடப்பட்டிருந்தது. 8 வாரங்கள் கடந்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே, ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்த நடைமுறையில், முறைகேடு நடக்கவில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டு உள்ள சீராய்வு மனுக்கள் இன்று  விசாரணைக்கு வர உள்ளன

Related Posts