அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அயோத்தி விவகாரத்தில் கடந்த 1994ம் ஆண்டு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதிகள் அத்தியாவசியமில்லை என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. மேலும், இந்த மனுவை விசாரித்த  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், அனைத்து மதங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களையும், சமமாக பாவிக்க வேண்டும் என்றும், அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.  மற்றொரு நீதிபதி நசீர் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். அவர் தனது தீர்ப்பில், 1994 ம் ஆண்டு எந்த ஆய்வும் இல்லாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும், அதனை விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மூல வழக்கு விசாரணையை அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரிக்கும் என்று கூறினர்

Related Posts