அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநில மாநாடு

  திருச்சியில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                திருச்சி – நாவலூரில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவின் தலைமையில், அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநில மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் காவிரி படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பது, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு உள்ளிட்ட 25 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில், பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநிலங்களின் உரிமைகளை ஏற்றுக் கொண்டதாக அரசியலமைப்பு சட்டம் அமைய வேண்டும் என அறிஞர் அண்ணா பேசியதை சுட்டிக்காட்டினார்.

திமுக  துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Related Posts