அரசால் தடைசெய்யப்பட்ட 1600 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா – பான்மசாலா – ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பெருட்கள் கடைவீதியில் மொத்தமாகவும், சில்லரையாகவும்  பொதுமக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

 

புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை  அதிகாரிகள் கருங்கல் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

 

1600 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை  பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இதன் மதிப்பு 16 லட்ச ரூபாய் என தெரிவித்தனர்.

(பைட்)

Related Posts