அரசியல் ரீதியாக தாங்கள் பார்க்காத ஜெயிலே கிடையாது

அரசியல் ரீதியாக தாங்கள் பார்க்காத ஜெயிலே கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-25

சென்னை நடுக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் அங்காடியை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மீன்கள் சுகாதாரமான முறையில் விற்கப்படும் வகையில் மேலும் 19 அங்காடிகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். திமுக ஆட்சிக் காலத்தில் அரசியல் ரீதியாக அ.தி.மு.கவினரான தாங்கள் பார்க்காத சிறையே கிடையாது என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், காவல்துறை தனது கடமையை ஒழுங்காக செய்து கொண்டிருப்பதாகவும், பொதுமக்களுக்கு அவர்கள் நண்பன், சமூக விரோதிகளுக்கு எதிரி என்றும் கூறினார்.

Related Posts