அரசுக்கும் உயர்கல்வித் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்

துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசுக்கும் உயர்கல்வித் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி அளவிற்கு பணம் புரண்டதாகவும் இதனால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்ததாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். ஆளுநரின் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பழகன், துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசுக்கும் உயர்கல்வித் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்வும், ஆளுநர் பன்வாரிலால் எதை மனதில் வைத்துக்கொண்டு பேசினார் என தெரியவில்லை எனவும் கூறினார். துணைவேந்தர்களை நியமிப்பது முழுக்க முழுக்க ஆளுநர் மட்டுமே என்று கூறிய அமைச்சர் கே.பி. அன்பழகன், தேடுதல் குழுவை அமைப்பதுடன் அரசின் பணி முடிந்துவிடுவதாகவும் குறிப்பிட்டார். தேடுதல் குழு  துணைவேந்தர் பதவிக்கு 3 நபர்களை தேர்வு செய்து ஆளுநரிடம் ஒப்படைத்துவிடும் எனவும், அந்த 3 பேரில் ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார் எனவும் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்

Related Posts