அரசுக் கல்லூரிகளைப் போலவே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சிக் காலத்தில் ஊதியம் வழங்கப்படும்

அரசுக் கல்லூரிகளைப் போலவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்சிக் காலத்தில் ஊதியம் வழங்கப்படும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இறுதியாண்டு முடியும் தருவாயில், ஓராண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவார்கள். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பயிற்சிக்காலத்தின் போது 6 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஊதியம் கிடைப்பதில்லை. இந்திய மருத்துவ கவுன்சில் இதற்கான விதிமுறையில் மாற்றம் செய்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்சிக்கால ஊதியம் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. விதிமுறையில் மாற்றம் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும் விரைவில் இது அமலுக்கு வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கவுன்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts