அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளார்: செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளதாகஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், 7 ஆயிரத்து 500 பள்ளிகளில் செப்டம்பர் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் என்றும், அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பிளஸ் 2 முடித்தவுடன் மாணவ-மாணவிகளுக்கு சார்ட்டட் அக்கவுண்டன்ட் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும், தற்போது 20 ஆயிரம் பேருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  பிற துறைகளை விட பள்ளிக்கல்வித்துறையே அதிக நிதி ஒதுக்கீட்டை பெறுவதாகவும்,, மாணவர்கள் அறிவை வளர்த்து, திறமைகளை வளர்ப்பதே உண்மையான வளர்ச்சி என்றும் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் பயின்ற 2 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்திருப்பதாகவும், . இருமொழிக் கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும்  கூறினார்.

Related Posts