அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் விவசாயிகளின் நிலை புரியும்

அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் விவசாயிகளின் நிலை புரியும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

                சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும்,சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் விவசாயிகளின்  நிலை புரியும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Posts