அரசு அலுவலகங்கள் உள்பட நாடு முழுவதும் திடீர் சிபிஐ சோதனை

அரசு அலுவலகங்கள் உள்பட நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கவுகாத்தி,ஸ்ரீநகர், ஷில்லாங், சண்டிகர், சிம்லா, சென்னை, மதுரை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, புனே, காந்திநகர், போபால், ஜபல்பூர், நாக்பூர், பாட்னா, ராஞ்சி, காசியாபாத், லக்னோ, டேராடூன் ஆகிய ஊர்களில் 150 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் ஊழல் மிகுந்துள்ளதாக சி.பி.ஐ.க்கு பல்வேறு புகார்கள் வந்தன.இதைத்தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் சுங்க அலுவலங்கள்,ரயில்வே, நிலக்கரி சுரங்க அலுவலங்கள், மருத்துவம், சுகாதாரத்துறை அலுவலங்கள், மின்வாரியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலங்கள், போக்குவரத்து, தீயணைப்புத்துறை அலுவலங்கள், நெடுஞ்சாலைத்துறை, துறைமுக பொறுப்பு கழக அலுவலங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலங்களில் சோதனை நடைபெற்றதாகவும், பொதுமக்கள் அதிகமாக நாடும் அலுவலங்களில் லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதாக வந்த புகார்களை அடுத்து சோதனை நடைபெற்றதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

Related Posts