அரசு சுவரில் விளம்பரம் செய்யுங்கள், பிரச்சினை என்றால் பார்த்து கொள்வோம்

அரசு சுவரில் விளம்பரம் செய்யுங்கள், பிரச்சினை என்றால் பார்த்து கொள்வோம் என தொண்டர்களை தூண்டும் விதமாக அமைச்சர் உதயக்குமார் பேசியுள்ளார்.

      மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேர்தல் பணியில் கண்ணும், கருத்துமாக செயல்பட வேண்டும் எனவும் அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி கூற வேண்டும் எனவும் கூறினார். மேலும், சுவர் விளம்பரம் செய்ய முன்பு இருந்த மாதிரி கட்டுபாடுகள் கிடையாது எனவும், அரசு சுவரில் கூட விளம்பரம் செய்யுங்கள், பிரச்சினை என்றால் பார்த்துக்கொள்வோம் என கூறினார்.

Related Posts